Saturday, September 14, 2024

நாளை வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்தின் முக்கிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர ஜெயம் ரவி கதநாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.அவர் கடைசியாக நடித்திருந்த சைரன் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவி பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அடுத்தடுத்தென பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவரின் நடிப்பில் வெளிவரவுள்ள படங்களின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி, மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது. ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தினை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதர் படத்தின் முக்கியமான அப்டேட்டை ஒன்றை நாளை காலை 11:11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அளித்துள்ளனர். இது எந்தமாதிரியான அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News