Wednesday, May 8, 2024

நண்பரின் திருமணத்திற்காக ஷூட்டிங்-ஐ ஒதுக்கி வைத்துவிட்டு வந்த விஜய்… விஷ்ணு கமல் பகிர்ந்த சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யை சந்தித்த குஷியில் இருக்கும் பிரபல கமலா தியேட்டர் நிர்வாக இயக்குநர் விஷ்ணு கமல் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது,

போன வருஷம் தனுஷோட ‘வட சென்னை’ படத்தை நாங்கதான் ரீ-ரிலீஸ் பண்ணி தொடங்கி வெச்சோம்.அதை எல்லா தியேட்டர்லேயும் ஃபாலோ அப் பன்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 2004-ஆம் ஆண்டு ’கில்லி’ படம் ரிலீஸ் ஆனப்போ, கமலா தியேட்டரில் ரிலீஸ் ஆகல. அப்போல்லாம், ஒரு ஏரியாவுக்கு ஒரு தியேட்டர்ல மட்டும்தான் ரிலீஸ் பண்ணனும்னு ரூல்ஸ் இருந்துச்சு. அதனால, உதயம் தியேட்டர்லதான் ’கில்லி’ ரிலீஸ் ஆச்சு. அப்போல்லாம், நான் நாலு வயசு குழந்தை. எங்க தியேட்டர்ல கில்லி ரிலீஸ் செய்யமுடியாதது ரொம்பவே வருத்தம். ஆனா, அப்போ விட்டதை இப்போ பிடிச்சுட்டோமுனு நினைக்கிறோம்.

அதே மாதிரி ஏப்ரல் 20-ஆம் தேதி ’கில்லி’ ரீ-ரிலீஸ் பண்ணினோம். அப்போதிலிருந்து, இப்போவரை ஹவுஸ்ஃபுல்தான். இந்த 17 நாட்களும் தியேட்டரில் ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். இன்னும் ஒரு வாரம் போச்சுன்னா, ’லியோ’ சாதனையே முறியடிச்சுடும். அதாவது, கில்லி இதுவரைக்கும் 52,000 டிக்கெட்ஸ் வித்திருக்கு. இன்னும் ஒரு வாரம் ஆச்சுன்னா ’லியோ’ டிக்கெட்ஸ் விற்பனை சாதனையையும் முறியடிச்சிடும். 50 நாட்களுக்கு மேல கில்லி ஓடும்னு நினைக்கிறேன். தியேட்டரில் ரசிகர்கள் பாடல்களை ஒன்ஸ்மோர் கேட்குறாங்க. அதனால, ஒன்ஸ்மோரும் போடுறோம் என்றார்.

நடிகர் விஜய்யை சந்தித்தது குறித்து பேசிய அவர் அந்த சந்திப்பு 15 நிமிடங்கள் இருந்துச்சு. போட்டோகிராஃபர் இருந்தாங்க. அவங்க இப்போ வேணாம்னு சொல்லிட்டு, என்னை மட்டும் தனியா பேசணும்னு கூப்பிட்டு போயி பேசினாரு. எங்கப்பாவும் விஜய் சாரும் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேரும் லயோலா காலேஜ்ல ஒண்ணா படிச்சாங்க. அப்பா அம்மா திருமணத்தப்போ விஜய் சாரு செல்வா பட ஷூட்டிங்குல இருந்திருக்காரு. அப்பா திருமணத்துக்காக செல்வா பட ஷூட்டிங் க்ளைமாக்ஸைக்கூட ஒத்தி வெச்சுட்டு ஓடி வந்து அப்பாவுக்கு துணை மாப்பிள்ளையா இருந்திருக்காரு. அந்தளவுக்கு ஃபரெண்ட்ஷிப். இதையெல்லாம் நான் விஜய் சார்க்கிட்ட சொன்னப்போ, எல்லாம் ஞாபகம் இருக்குன்னு சொல்லி அப்பா, அம்மாவை எப்படி இருக்காங்கனு நலம் விசாரிச்சாரு என்று கூறியுள்ளார்.

விஜய்யோட கில்லி ரீ-ரிலீஸ் எப்படி போயிட்டிருக்குன்னு கேட்டாரு. புது படங்கள்ல படத்துல ’லியோ’ வசூல் சாதனை படைச்சது. இப்போ, ’கில்லி’ வசூல் சாதனை படைச்சு பிரமாதமா போய்க்கிட்டிருக்குன்னு சொன்னேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. இன்னும் கொஞ்சம் பர்சனலா பேசிக்கிட்டிருந்தோம். அந்த சந்திப்பை என்னால மறக்கவே முடியாது. பார்க்கணும்னு சொன்னதுமே அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரு. விஜய் சாரோட படங்களில் அதிக நாட்கள் தியேட்டரில் ஓடியது ‘பூவே உனக்காக’த்தான். அடுத்து, ’குஷி’, ’சச்சின்’, ’துப்பாக்கி’ படங்களை ரீ ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கோம். ’கில்லி’தான் ஆல்டைம் ஃபேவரைட் என்பவரிடம், அஜித் சாரை மீட் பண்ண ஐடியா இருக்க என்று கேட்டபோது

அஜித் சாரை மீட் பன்றதுக்கு அபார்ட்மெண்ட் கேட்டிருக்கேன். ’விடாமுயற்சி’ ஷூட்டிங் மற்றும் குட் பேட் அக்லிக்கு பிசியா இருக்காரு. அவர் டைம் கொடுத்துடுவாருன்னு நம்பிக்கை இருக்கு. அவர் டைம் கொடுத்ததும் உடனே மீட் பண்ணிடுவேன். அஜித் சார் பிறந்தநாளுக்காக ’தீனா’ ரிலீஸ் பண்ணினோம். மூணு ஷோ போட்டோம். ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துட்டாங்க. அஜித் சார் படங்களில் என்னோட ஃபேவரைட் ’மங்காத்தா’. அடுத்து, ’மங்காத்தா’வை ரீ-ரிலீஸ் பண்ணணும்னு ரசிகர்கள் கேட்குறாங்க. அடுத்து அதுதான் ரீ ரிலீஸ்” என்பவரிடம் உங்களோட ஃபேவரைட் ஹீரோ யாரு? என்று கேட்டோம்.

நான் ரஜினி சாரோட பயங்கரமான ஃபேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிதான்.” என்று அப்போட்டியில் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News