Wednesday, May 8, 2024

வெயில் சுட்டெரித்த கால்களுக்கு கவசமாக மாறிய பெஞ்சமின்… இப்படி ஒரு மனுஷனா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருப்பாச்சி படத்தில் நடிகர் பெஞ்சமின், கண்ணப்பன் என்ற கேரக்டரில் விஜய்க்கு நண்பனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அவர் முன்னதாக சேரனின் வெற்றி கொடி கட்டு படத்தில் காமெடி கேரக்டரில் தமிழில் என்ட்ரி கொடுத்தார் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.

பெஞ்சமின் சக நடிகர்களின் பிரச்சினைகளுக்கும் நலிவுற்ற கலைஞர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார், மேலும் அவர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளையும் துவங்கியுள்ளார். சேலத்தில் வெயிலில் வாடும் மக்களுக்கு செருப்புகளை வழங்கி உதவிய செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 108 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியதால், மக்கள் அனல் காற்றில் தவித்தனர்.பொதுமக்கள் சாலையில் வெறுங்காலில் நடந்து செல்வதை கண்ட காமெடி நடிகர் பெஞ்சமின் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். தொடர்ந்து ஹெல்மெட் கடைக்காரர் ஒருவரின் உதவியும் பெஞ்சமினுக்கு கிடைத்த சூழலில் சேலம் அரசு மருத்துவமனை சாலையில் மூட்டை மூட்டையாக செருப்புகளுடன் களமிறங்கினார்.

செருப்பில்லாமல் நடந்து போனவர்களுக்கு செருப்புகளையும் வெயில் கொடுமையில் சிக்கி தவித்தவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களையும் கொடுத்து உதவினார்.இப்படி பொது மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்ட பெஞ்சமினின் இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது.

- Advertisement -

Read more

Local News