Wednesday, May 8, 2024

கில்லி படத்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து படைக்க வரும் விஜய்யின் ‘வில்லு’ ரீ ரிலீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகர் விஜய் நடிப்பில் 2009 -ம் ஆண்டு வெளியான படம் ‘வில்லு’. இப்படம் அதிரடி நகைச்சுவைப்படமாகும். பிரபு தேவா இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை நயன்தாரா , பிரகாஷ் ராஜ் , வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.

சமீபத்தில ரீ ரிலீஸ் ஆன கில்லி திரைப்படம் மாபெரும் வரவேற்பையும் கொண்டாட்டத்தையும் மற்றும் வசூலையும் பெற்றது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களிலயே அதிக வசூல் செய்யப்பட படம் என்ற சாதனையையும் பெற்றது.இன்று வரையிலும் கூட பல திரைப்படங்களில் கில்லி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து வருகிற ஜூன் 22 – ந் தேதி விஜயின் 50 -வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ‘வில்லு” படத்தை ஜூன் 21- ந்தேதி அன்று ‘ரீ-ரிலீஸ்’ செய்யப்படும் என ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபகாலமாக பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கான ஆதரவு அதிகரித்து கொண்டே வருவதால் ரி ரிலீஸ் படங்களை காண மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News