Monday, May 6, 2024

நான் லியோ படத்துல நடிக்கல ஆனா கூலி படத்துல… அர்ஜுன் தாஸ் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ள இப்படம் அக்டோபரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கும்போதே லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பெயர் “கூலி”.

அர்ஜுன் தாஸ் கூலி படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அர்ஜுன் தாஸ் மீடியாக்களிடம் கூறுகையில், “நான் லியோ’ படத்தில் நடிக்கவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் எனக்கு எப்போதுமே சிறந்த நண்பர். அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். நான் நடிப்பேனா இல்லையா என்பதை அவரே தான் சொல்ல வேண்டும்.

அர்ஜுன் தாஸ் தற்போது ரசவாதி படத்தில் நடித்திருக்கிறார். மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாந்தகுமாரின் இரண்டு படங்களும் பிரமாண்டமாக இருந்ததாகவும், இதுவும் அப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

- Advertisement -

Read more

Local News