Monday, May 6, 2024

தனிமையில் இனிமை காணும் தனிக்காட்டு ராஜா! விஜய் சேதுபதியின் இன்ஸ்டா பதிவு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.இந்த ஆண்டு ஜனவரியில், கத்ரீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்களை பதிவிடுவது வழக்கம்.

இம்முறை அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் சூரிய அஸ்தமனத்தை தனியாக ரசிப்பதைக் காணமுடிகிறது.பல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்.ஏன் வி‌ஜய் சேதுபதி தனிமையில் இனிமை காண முயற்சி செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News