Sunday, May 26, 2024

அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட புகைப்படத்தை கண்டு அசந்த போன ரசிகர்கள் #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘கோட்’. இதில் நடிகர் விஜய் தன்னுடைய காட்சிகளை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து படம் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டு வருகிறார், இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். செப்டம்பர் 5ம் தேதி பட வெளியீடு நெருங்கியுள்ள நிலையில், படத்தின் பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் காட்சிகளுக்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு சில நாட்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அங்கு விஜய்யின் பிரத்யேக காட்சிகளை இரண்டு நாட்கள் படமாக்கி டீ ஏஜிங் வேலைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் VFX பணிகள் முடிந்ததாக அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் வெளியிட்டார்.

தற்போது அவர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில், விஜய் மற்றும் வெங்கட் பிரபு மானிட்டரைக் காண்பது போல் இருந்தது, அருகிலிருந்து அர்ச்சனா கல்பாத்தி பார்த்து கொண்டிருந்தார்.

இந்தப் படத்தை பற்றி நடிகர்கள் அதிகமாக பேசினாலும், முக்கியமான விஷயங்கள் எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கேமியோ கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், திரிஷா உள்ளிட்டவர்களும் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News