Tuesday, May 28, 2024

ராமாயணம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? தீயாக பரவும் தகவல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் ராமாயணக் கதை திரைப்படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

தொடக்கத்தில், இப்படத்தை அல்லு மன்டேனா மீடியா வென்ச்சர்ஸ் எல்எல்பி, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், மற்றும் அல்லு அரவிந்த் இணைந்து தயாரிக்க இருந்தனர். ஆனால் கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர்கள் பிரிந்தனர். இதனால், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ், நடிகர் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுள்ளது.

முதல் கட்டத் திட்டத்தில் இப்படம் மூன்று பாகங்களாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது, இரு பாகங்களாகவே தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், ரன்பிர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் சில வாரங்களுக்கு முன்பு வைரலானது.

ஆனால் சமீபத்திய தகவலின் படி, இப்படத்தின் காப்புரிமை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. தயாரிப்பாளர் மது மண்டேனா, நமித் மல்ஹோத்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பி, படத்தின் ஸ்கிரிப்ட் உரிமை தங்களிடமே இருப்பதாகவும், வேறு யாரும் அதை பயன்படுத்தினால், அது காப்புரிமை மீறல் என எச்சரித்துள்ளார்.இதனால், படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காப்புரிமை பிரச்சினை தீர்க்கப்பட்ட பின், ஷூட்டிங் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News