Monday, May 27, 2024

மாயி பட இயக்குனர் மரணம்… வேதனையோடு தனது இரங்கலை பதிவு செய்த சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சூர்ய பிரகாஷ் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடிப்பில் “மாணிக்கம்” படத்தை இயக்கி தனது இயக்குநராக அறிமுகமானார.அந்த படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. பின்னர், சரத்குமார், மீனா, வடிவேலு ஆகியோர் நடித்த “மாயி” படத்தை இயக்கினார். இந்த படம் திரையரங்குகளில் நீண்ட நாட்கள் ஓடி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

“மாயி” படத்தின் வெற்றிக்குப் பின்னர், சூர்ய பிரகாஷ் மூன்று ஆண்டுகள் தமிழில் படங்களை இயக்கவில்லை. ஆனால், மீண்டும் சரத்குமாரை வைத்து “திவான்” படத்தை இயக்கினார், ஆனால் அந்த படம் தோல்வியடைந்தது.தமிழில் வாய்ப்புகள் இல்லாததால், டோலிவுட் சென்ற சூர்ய பிரகாஷ், பரத சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றினார்.

பின்னர், கிராமத்தை மையமாகக் கொண்டு காதல் திரைப்படமான “வருசநாடு” படத்தை இயக்கினார். இந்த படம் தனது உறவினரின் நிஜ வாழ்க்கை காதலை அடிப்படையாகக் கொண்டதாகவும், இதில் புதுமுகங்களான குமரன் மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், படம் இன்னும் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை.2015க்குப் பிறகு சுமார் பத்து ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த சூர்ய பிரகாஷ், இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார். மேலும், பல திரைப் பிரபலங்களும் இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News