Monday, May 27, 2024

கூலி படத்தில் ரஜினியோடு இணையும் சத்தியராஜ்… என்ன கதாபாத்திரம் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.’கூலி’ படத்தின் டீசரில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தங்கமகன்’ படத்தில் இடம்பெற்ற ‘வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசை இடம்பெற்றிருந்தது.

‘தங்கமகன்’ படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார். அனுமதி இல்லாமல் தனது இசையை ‘கூலி’ டீசரில் பயன்படுத்தியதாக, இளையராஜா படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.’வா வா பக்கம் வா’ என்ற பாடலின் இசையை ‘கூலி’ படத்தில் பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும். இல்லையெனில், அந்த டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதை செய்யாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உரிமை உண்டாகும் என்று இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ‘கூலி’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சத்யராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் அல்லாமல், ரஜினிகாந்தின் நண்பராக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.1986-ல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ‘மிஸ்டர் பாரத்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதில், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்.வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சத்யராஜ் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்த்-சத்யராஜ் கூட்டணி அந்த படத்திற்கு பலத்தை கொடுத்தது. ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா…’ பாடல் மிகவும் பிரபலமானது.

- Advertisement -

Read more

Local News