Thursday, May 2, 2024

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பயணி என்ற பெயரில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கினார். அந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி சிறிதளவு வரவேற்பைப் பெற்றது.

ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தை வைத்து இயக்கிய லால்சலாம் படம் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெரிய அளவிலான பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கு எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News