Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தீபாவளி ரேஸில் மூன்று படங்கள்… முந்த போவது யார்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2024ம் ஆண்டு தீபாவளியில் சில ‘டாப்’ நடிகர்களின் படங்கள் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளிக்கு முன்னதாகவே நாளை மறுதினம் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ மற்றும் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. ரஜினி படத்துடன் போட்டியிட வேண்டாமென ‘கங்குவா’ படம் போட்டியிலிருந்து விலகியுள்ளது, இதன் வெளியீடு நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் “அமரன்” மற்றும் ஜெயம் ரவியின் “பிரதர்” படங்கள் தீபாவளிக்கு வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, கவின் நடித்துள்ள “பிளடி பெக்கர்” படமும் தீபாவளிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட தீபாவளிக்கு ‘டாப்’ நடிகர்களின் படங்கள் வெளிவராமல், அடுத்த நிலை நடிகர்களின் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது. 

கமல்ஹாசன் தயாரிக்கும் படம் என்றாலும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுவதால், “அமரன்” படத்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News