16-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வெகுவிமர்சையாக தொடங்கியுள்ளது. “வேற்றுமையில் உலகளாவிய அமைதி” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.மார்ச் 1-ந் தேதி தொடங்கிய இந்த விழா, மார்ச் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூரு ஓரியன் வணிக வளாகத்தில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. திரைப்படங்கள் கன்னட சினிமா, இந்திய திரைப்படங்கள், ஆசிய திரைப்படங்கள், உலக திரைப்படங்கள் என நான்கு பிரிவுகளில் திரையிடப்படும்.
இந்திய திரைப்படப் பிரிவில், தமிழ் திரைப்படங்கள் என ‘வாழை’, ‘அமரன்’, ‘மெய்யழகன்’ ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளன.