Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

ஐந்து வருட காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் ‘மாயபிம்பம்’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கிய ‘மாயபிம்பம்’ படம் ஐந்து வருட நீண்ட காத்திருப்புக்கு பிறகு அடுத்த மாதம் வெளியாகிறது. இதில் புதுமுகங்கள் ஹரிகிருஷ்ணன், ஆகாஷ் பிரபு, ராஜேஷ், அருண்குமார், ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நந்தா இசையமைத்துள்ளார், எட்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குநர் சுரேந்தர் கூறும்போது, “படம் தயாராகி ஐந்தாறு ஆண்டுகளாகிவிட்டது. படம் பார்த்தவர்கள் ‘பருத்திவீரன்’, ‘மைனா’, ‘சேது’ போன்ற படங்களின் காதல் அனுபவங்களைப் பெற்றதாக கூறினர். இப்போது சிறு படங்களுக்கு மக்கள் வரவேற்பு தருகிறார்கள். இயக்குநர் ராம் சார் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் மற்றும் அவனது மூன்று நண்பர்கள் இவர்களின் சந்தோஷமான நட்பு வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அது எவ்வாறு அவர்களை கடைசி எல்லை வரை துரத்துகிறது, எவ்வாறு வாழ்க்கையை மாற்றுகிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் படத்தின் மையக் கதை என்றார்.

- Advertisement -

Read more

Local News