நடிகர் அமரன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சிவகார்த்திகேயன், “பராசக்தி” என்ற புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தொடங்கியுள்ளது. கொழும்பில், மதுரை ரயில் நிலையம் சார்ந்த காட்சிகள் மற்றும் தில்லியில் நடக்கும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இதற்காக, “இந்தி வாழ்க” மற்றும் “டெல்லி ரயில் நிலையம்” என்று பெயர் பொறிக்கப்பட்ட பழைய பேருந்து ஒன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.