Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

இந்த வருடம் என் 3 படங்கள் ரிலீஸாகிறது… எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது – நடிகை மாளவிகா மோகனன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ஹிந்தியில் யுத்ரா படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2, மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஹிருதயப்பூர்வம் மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில், ஒரு ரசிகர் அவரிடம், “உங்கள் அடுத்த வெளியான படம் எது?” என்று கேட்டார்.

அதற்குப் பதிலளித்த மாளவிகா மோகனன், “தெலுங்கு – தி ராஜாசாப், தமிழ் – சர்தார் 2, மலையாளம் – ஹிருதயப்பூர்வம். 2025 மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும்” எனக் கூறினார். மேலும், பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News