Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

லியோ பட நடிகர் மேத்யூ தாமஸ் நடிக்கும் ‘லவ்லி’ !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். அதன் பிறகு தொடர்ந்து முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த மேத்யூ தாமஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து தமிழிலும் பிரபலமானார்.சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்திலும் நகைச்சுவை நடிப்பில் பிரமாதப்படுத்தினார். இந்த நிலையில் மலையாளத்தில் இவரது நடிப்பில் லவ்லி என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் ஒரு ஈ நடித்துள்ளது.இந்த டீசரில் மேத்யூ தாமஸ் அந்த ஈயுடன் பேசுவதை பார்க்கும்போது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா, நானி நடித்த நான் ஈ படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அதில் நாயகன் ஈயாக வந்தார். இதில் நாயகி ஈயாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News