நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்து கடந்த ஆண்டு உருவாக்கிய படம் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” “தி கோட்”). ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

“தி கோட்” திரைப்படத்தின் முடிவில், அடுத்த பாகம் உருவாகலாம் என்பதைக் காட்டும் சில முக்கிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து முன்பே வெங்கட் பிரபு கூறியதாவது, “அந்த காட்சிகள் முழுவதும் கற்பனை அடிப்படையிலானவை மட்டுமே. ஆனால் எதிர்காலத்தில் அடுத்த பாகம் உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெங்கட் பிரபுவிடம், “தி கோட்” படத்தின் அடுத்த பாகம், அதாவது “தி கோட் vs ஓ.ஜி.” (OG) குறித்த தகவல் கேட்டபோது, “இந்தப் படத்துக்கான அப்டேட் 2026-ம் ஆண்டுக்கு பிறகு வெளியாகும்” என்று உறுதிப்படுத்தினார்.தி கோட்” திரைப்படத்தில் விஜயுடன், மோகன், பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, கோமல் ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருந்தார்.