Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பிரம்மாண்டமாக நடந்த ‘இட்லி கடை’ பட தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணம்… தமிழக முதல்வரும் திரைப்பிரபலங்களும் பங்கேற்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேத்தியான தரணீஸ்வரிக்கும், தனுஷ் நடித்த ‘இட்லிகடை’ உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளராக விளங்கும் ஆகாஷிற்கும், சென்னையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் நடத்தி வைத்தார். இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆகாஷ் தயாரிப்பாளராக இருந்ததால் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்த வரிசையில் நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர். இருவரும் சிறிது இடைவெளி விட்டு வைக்கப்பட்டிருந்த நட்சத்திர வரிசையிலான இருக்கைகளில் ஒருவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசவில்லை.

சமீபகாலமாக நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஆவணப்படம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்த விவகாரம் இதற்கு பின்னணியாக உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், அட்லீ, அனிருத், லைகா தமிழ்குமரன், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அருள்நிதி, ஹரிஷ் கல்யாண், மஹத், தரண்குமார், தமிழரசன் பச்சமுத்து, கலையரசன், ரவிகுமார், பாடலாசிரியர் விவேக், பாலசரவணன், தேஜு அஸ்வினி, கயாடு லோகர், சம்யுக்தா விஸ்வநாதன், பிரேம் உள்ளிட்ட திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

Read more

Local News