ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நேற்று முன்தினம் இரவு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் லைவ் கான்சர்ட் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெத்தி பட கதாநாயகன் நடிகர் ராம்சரண் மற்றும் கதாநாயகி நடிகை ஜான்வி கபூர் இருவரும் கலந்து கொண்டனர். ராம்சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து ‘சிக்ரி சிக்ரி’ என்கிற லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியான சிக்ரி பாடலையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஏ.ஆர்.ரகுமான்.


