Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானது ‘ராம்பந்து’ என்ற தெலுங்கு படத்தில்தான். தமிழில் முதலில் சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் ‘அட்டகத்தி’ படம் மூலம் கதாநாயகியாகி அதன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.

அதேபோல் தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி, மிஸ்மேட்ச், வேர்ல்ட் பேமஸ் லவ்வர், தக் ஜெகதீஸ், ரிபப்ளிக்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். கடைசியாக அவர் நடித்த ‘சங்கராந்தகி வஸ்துனம்’ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் அடுத்த தெலுங்கு படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி தயாரிக்கிறார். குஷேந்தர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். பரத் மஞ்சிராஜு இசையமைக்கிறார்.வீர் நாயகனாக நடிக்கிறார், பரத் தர்ஷன் இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ம் தேதி தொடங்குகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News