Wednesday, October 30, 2024

அமரன் இயக்குனரிடம் நான் இந்த சத்தியம் வாங்கினேன்- நடிகை சாய் பல்லவி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி இன்று வளர்ந்து வரும் திறமையான நடிகைகளில் ஒருவர். அவரது இயல்பான அழகு, சிறந்த நடிப்பு திறன், மனதை கொள்ளை கொள்ளும் எக்ஸ்பிரெஷன்கள் மூலம் தன்னுடைய தனிச்சிறப்பான பாதையை நிரூபித்துள்ளார். அவரின் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் மனைவியாக நடித்துள்ளார். இதை முன்னிட்டு, படத்தின் பிரமோஷனில் அவர் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

அமரன் படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் கூறியதாவது: “ஒரு பயோபிக் படம் நீளமாக இருந்தால், அதில் ஹீரோயின் வரும் காட்சிகளை வெட்டிவிடுவார்கள் என்பதால், இப்படத்தில் என்னுடைய காட்சிகளை குறைக்காதீர்கள் என்று இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியிடம் சத்தியம் வாங்கிக் கொண்டேன்.

அவரும் அதை உறுதியாக ஏற்றுக் கொண்டார். மேலும் ‘இந்து ரெபெக்கா வர்கீஸ்’ எனும் உங்கள் கதாபாத்திரமும் ‘முகுந்த் வரதராஜன்’ கதாபாத்திரம் போல் முக்கியமானது என குறிப்பிட்டார். இதன் பின்னரே நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்று கூறினார்.இதனை கேட்ட ரசிகர்கள், “சாய் பல்லவி செம ஷார்ப்பா இருக்காங்க” என மகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News