Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பிரபல நடிகையான திஷா பதானி தந்தையிடம் நடந்த பண மோசடி… வெளியான அதிர்ச்சி தகவல் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழும் திஷா பதானி சமீபத்தில் நடித்த கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானி உத்தரப் பிரதேச அரசில் உயர்பதவி பெறும் வாய்ப்புக்காக ஒரு மர்மக் கும்பலிடம் ரூ.25 லட்சம் மோசடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உ.பி. அரசின் உயரதிகாரிகளுடன் தங்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும், தேவையான தொகையை கொடுத்தால் அரசு கமிஷனில் உயர்நிலை பதவியை ஏற்படுத்தி தருவதாக மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.

இந்த உறுதியை உண்மை என நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, மர்மக் கும்பலுக்கு ரூ.20 லட்சத்தை வங்கிக் கணக்கில் மாற்றியதுடன், ரூ.5 லட்சத்தை ரொக்கமாக வழங்கியுள்ளார். மூன்று மாதங்கள் கடந்தும் அவர் எதிர்பார்த்த பதவி வழங்கப்படாததால், அவர் பணத்தை திருப்பி கேட்க முயன்றுள்ளார். ஆனால், அந்த மர்மக் கும்பல் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News