நடிகர் கார்த்தி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் ‘மெய்யழகன்’. இந்த படத்தைத் தொடர்ந்து, அவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 26வது படம் ஆகும், இதில் அவர் MGR ரசிகராக நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வாரத்தில், 26 அல்லது 27 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.