மாடலிங் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீநிதி ஷெட்டி, 2018ஆம் ஆண்டு KGF திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். KGF மற்றும் KGF 2 படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் நானி நடித்த ஹிட் 3 படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருந்த ஸ்ரீநிதி, இதுவரை நடித்த அனைத்து படங்களும் வன்முறை மற்றும் ரத்தக் காட்சிகளால் நிரம்பியிருந்தன. ஆனால் இப்போது முதல் முறையாக ஸ்டண்ட் மற்றும் ரத்தமின்றி ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படம் தெலுசு கடா. சித்து ஜொன்னலகட்டா கதாநாயகனாகவும், நீரஜா கோனா இயக்குநராகவும் உள்ளார். வருகிற 17ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. புரமோஷன்களில் பங்கேற்ற ஸ்ரீநிதி, “என் வாழ்க்கையில் முதல்முறையாக ரத்தம் இல்லாத, காதல் நகைச்சுவைப் படத்தில் நடித்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.