Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

கும்கி 2 படத்தின் படப்பிடிப்பிற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானவை – இயக்குனர் பிரபு சாலமன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கும்கி 2’. இதில் ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், இப்படத்துக்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள் மிகவும் கடினமானவை. நெல்லையம்பதி என்ற மலைப்பகுதியில் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் ஜீப்பில் செல்லவே 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக்கொண்டது. அங்கு மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் படப்பிடிப்பு செய்தோம்.

பழைய பிரிட்டிஷ் விருந்தினர் இல்லத்தில் கடுமையான குளிரைச் சந்தித்து முழு படக்குழுவினரும் சிரமப்பட்டனர். படம் 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்து டிசம்பரில் திரையிடப்பட்டது. அதன் பிறகு கொரோனா அனைத்தையும் தலைகீழாக மாற்றியது. இத்தனை ஆண்டுகளாக தயாரிப்பாளர் காட்டிய பொறுமைக்கும் உறுதிக்கும் நான் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது என பிரபு சாலமன் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News