Touring Talkies
100% Cinema

Thursday, October 2, 2025

Touring Talkies

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய புகழை பெற்றார். சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.

தற்போது, இயக்குனர் மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் தி ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையை தமன் அமைத்துள்ளார்.

காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீடு சில காரணங்களால் தாமதமாகியது. இந்நிலையில் அடுத்தாண்டு சங்கிராந்தி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், தி ராஜா சாப் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News