தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று புகழ்பெற்றவர் இயக்குனர் ஷங்கர். தனது திரைப்பட பயணத்தின் தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியான வெற்றிகளையே கொடுத்தவர். ஆனால் சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்க்காத விதத்தில் தோல்வியடைந்தன. இந்த படங்கள் விமர்சனங்களையும் கடுமையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், எழுத்தாளர் மற்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ என்ற சரித்திர நாவலின் வெற்றிப் பெருவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், “என் வாழ்க்கையின் முதல் கனவுப் படம் ‘எந்திரன்’ தான். தற்போது என் புதிய கனவுப் படம் ‘வேள்பாரி’ என்று தெரிவித்தார்.
‘வேள்பாரி’ நாவலை திரைப்படமாக மாற்றும் முயற்சியை ஷங்கர் ஏற்கனவே தொடங்கி விட்டார். இந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் பணியும் முடிவடைந்துள்ளதாக அவர் சில முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார் தற்போது எப்போது இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.