Wednesday, October 30, 2024

நான் இதுபோன்ற படங்களில் மட்டுமே நடிக்கிறேன் என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்‌ – ஜெயம்ரவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் ‘பிரதர்’. எம். ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவியுடன், பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது.

படத்தின் முன் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி பேசுகையில், “’பிரதர்’ ஒரு நன்றான டீசன்ட் படம். லீனியர் நரேஷனில் அழகான ஒரு படமாகவும் குடும்பம் முழுதும் மகிழ்ச்சி அடையும் விதமாகவும் உருவாகியிருக்கிறது. தீபாவளிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ள படமாக இதை உருவாக்கியுள்ளோம். படத்தை உருவாக்கும் போது நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் நினைவில் நிற்பார்கள். இது கடுமையான உழைப்பில் உருவான திரைப்படம் என்றார்.

பூமிகா பல படங்களில் நடித்திருக்கிறார். அவரை திரையில் எப்போது பார்த்தாலும் சலிப்பே வராது. என் குடும்பத்தினருக்கும் அவரை மிகவும் பிடிக்கும், அவர்களும் பூமிகாவின் ரசிகர்கள். இந்தப் படத்தில் பூமிகாவிற்கு தம்பியாக நடிப்பதாகக் கூறியபோது குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் இப்படத்தில் நடிப்பதை ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கு ஒரு சிறந்த பலமாக இருக்கும், அவர் நடிப்பு திறமை படம் வெளியான பிறகு பேசப்படும் என்று தெரிவித்தார்.

“என் ரசிகர்கள் நான் நடனம் ஆடவில்லை என வருத்தப்பட்டார்கள், மேலும் ‘ஏ’ சர்டிபிகேட் படங்களில் மட்டும் நடிக்கிறேன் என்றும் கூறினர். அவர்களுக்காக இந்தப் படத்தில் நடனம் ஆடியுள்ளேன். இது ‘யூ’ சான்றிதழ் பெற்ற படம். இனி டான்ஸ் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். ‘மக்கா மிஷி’ பாடல் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது, ஆனால் படத்தில் உள்ள அக்கா-தம்பி எமோஷனல் பாடல் அனைவருக்கும் படத்தைப் பார்க்கும் பிறகு பிடிக்கும். இப்படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் சென்று மகிழ்ந்து பார்க்கும் படமாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News