தமிழில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ‘மெய்யழகன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி உடன் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, ஸ்வாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தொடர்ந்து இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கார்த்தி வா வாத்தியார் படத்தில் நடித்துள்ளார் அப்படமும் மெய்யழகன் படத்தை தொடர்ந்து ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது சர்தார் 2 படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் நடிகர் கார்த்தி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பில் இணையவுள்ளதாக சமீபத்தில் நடிகர் கார்த்தி கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை வருகின்ற செப்டம்பர் மாதம் 27ம் தேதி அன்று வெளியாகிறது என இன்று படக்குழு புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதே தேதியில் ஜெயம் ரவியின் பிரதர் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.