Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மை டியர் சிஸ்டர்’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி 2’ படம் வசூலிலும் விமர்சனத்திலும் வெற்றி பெற்றது. இவர் நடித்த சமீபத்திய படம் ‘ராம்போ’ சன்நெக்ஸ் ஓடிடியில் வெளியானது.

சிவப்பதிகாரம், தடையறத் தாக்க, எனிமி, மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மம்தா மோகன்தாஸ், தற்போது அருள்நிதியுடன் இணைந்து நடித்துள்ளார். ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தை இயக்கிய பிரபு ஜெயராஜ் இந்த புதிய படத்தையும் இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

மம்தா மோகன்தாஸ் கூறுகையில், இந்த படத்தில் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறேன். இது ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லும் கதை. படத்தில் நான் டக்கர் வண்டி ஓட்டும் டிரைவராக நடித்துள்ளேன். இந்த வருடம் எனது சினிமா பயணத்தின் 20ஆவது ஆண்டு என்றார். தற்போது இப்படத்திற்கு ‘மை டியர் சிஸ்டர்’ என்ற தலைப்புடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News