தமிழில் ‘சூது கவ்வும்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜிகர்தண்டா’, ‘டார்லிங் 2’, ‘மாநகரம்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘கேங்கர்ஸ்’ போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் முனீஸ்காந்த். நகைச்சுவை நடிப்பில் தன்னை நிலைநிறுத்திய அவர் தற்போது ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தை தேவ் மற்றும் கே.வி. துரை இணைந்து தயாரித்துள்ளனர். மிடில் கிளாஸ் தம்பதிகளாக முனீஸ்காந்த் மற்றும் விஜயலட்சுமி நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் மக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வருகிற 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

