காலநிலை மாற்றம் மற்றும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் கவலை தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து விவாதிப்பதுடன் நின்றுவிடாமல், பொறுப்புள்ள குடிமக்களாக ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத் தலைமுறையினரும் வாழத் தகுதியான பூமியை விட்டுச் செல்ல சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Add a Comment
