Advertisement

ஏ.ஆர். ரஹ்மான் – பரத் பாலா கூட்டணியின் ‘பனாரஸ்’ திரைப்படம் IFFI 2026-ல் தேர்வு!

இயக்குநர் பரத் பாலா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து உருவாக்கிய ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம் மூலம் பிரபலமானவர். தொடர்ந்து, 2013-ல் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மரியான்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மானே இசையமைத்திருந்தார். இந்நிலையில், இக்கூட்டணியில் உருவாகியுள்ள ‘பனாரஸ்’ திரைப்படம், 2026-ஆம் ஆண்டு இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவுக்குத் தேர்வாகியுள்ளது. நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் இவ்விழாவில் இப்படம் இந்தியாவில் திரையிடப்பட உள்ளது. அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உணர்வுபூர்வமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Add a Comment

Leave a Reply