நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுக்கு உணர்வுபூர்வமான வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். தங்களது வீட்டில் இடம்பெற்றுள்ள ஜோடிப் புகைப்படங்களின் வீடியோவுடன், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ‘நீயும் நானும்’ பாடலை இணைத்து அவர் வெளியிட்டுள்ளார். அதில், “மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்… என்னுடைய உயிர், உலகமே… உன்னை நேசிக்கிறேன், எனது தங்கமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Add a Comment
