ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘சீன்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.260 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் மூன்று ரூ.250 கோடி வசூல் படங்களைக் கொடுத்துள்ளார் சூர்யா. இப்படத்தில் வில்லனாக நடித்த நஸ்லெனுக்கு சூர்யா விலையுயர்ந்த கார்டியர் கிளாசிக் வாட்ச் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.4 லட்சத்திற்கும் அதிகம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
Add a Comment
