அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தின் ‘புட்ட பொம்மா’ பாடல் சுமார் ஏழு ஆண்டுகளாக யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தெலுங்குப் பாடலாக இருந்தது. 955 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்த இப்பாடலின் சாதனையை தற்போது ‘ரானு பம்பாய்கி ரானு’ என்ற நாட்டுப்புறப் பாடல் முறியடித்துள்ளது. ராமு ரத்தோட், லிகிதா பாடி நடித்த இப்பாடல் 2025 ஜனவரி 23-ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடல் தற்போது 957 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. முன்னணி நட்சத்திரம் நடித்த திரைப்படப் பாடலை, சுயாதீன நாட்டுப்புறப் பாடல் முறியடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Add a Comment
