தெலுங்கில் இந்த வாரம் வெளியாகவுள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் சாத்விகா வீரவள்ளி. அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்து வளர்ந்த இவர், பொறியியல் மற்றும் முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். தொடர்ந்து ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நடிப்புத் துறைக்கு வந்துள்ளார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த சாத்விகா நடிக்கும் இப்படம், தமிழில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ என்ற பெயரில் நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது.
Add a Comment
