இசையமைப்பாளர் சாய் அபயங்கர், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மண்ணஞ்சேரி கானக்கூர் ஸ்ரீ தன்வந்திரி மகாக்ஷேத்திரத்தில் நடைபெற்ற சிறப்புத் திருவிழா மற்றும் தன்வந்திரி மகா யாக நிகழ்வில் பங்கேற்றார். பாரம்பரிய உடையில் மேடையில் தோன்றிய சாய் அபயங்கரைக் காண ஏராளமான கேரள ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவரிடம் ஆட்டோகிராப் பெறுவதற்காகக் காத்திருந்த ஒரு சிறுமி மேடைக்கு வந்தார். அந்தச் சிறுமியை அருகில் அழைத்த சாய் அபயங்கர், அன்புடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். தனக்குப் பிடித்த இசையமைப்பாளரிடம் ஆட்டோகிராப் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்த சிறுமி, சாய் அபயங்கரின் கன்னத்தில் அன்பாக முத்தமிட்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Add a Comment
