இந்தியத் திரையுலகின் கிங் என அழைக்கப்படும் ஷாருக்கான், ஆண்டுதோறும் தனது பிறந்தநாளின்போது மும்பையில் உள்ள மன்னத் இல்லத்தின் முன்பு திரண்டிருக்கும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, மன்னத் இல்லத்தின் முன்பு ரசிகர்களைச் சந்திப்பதற்குப் பதிலாக, மும்பையில் உள்ள பால்கந்தர்வ ரங் மந்திர் அரங்கில் ரசிகர்களுக்கான பிரத்யேக சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை ஷாருக்கான் நடத்தமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் அவர் பிஸியாக இருப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
Add a Comment
