‘தி டர்ட்டி பிக்சர் 2’ படத்தில் தமன்னா?

மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தி டர்ட்டி பிக்சர்’. இதில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்த வித்யா பாலன், தனது துணிச்சலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். கவர்ச்சிக்கு மட்டுமின்றி நடிப்புக்கும் முக்கியத்துவம் அளித்த அவரது நடிப்பு பெரும் பாராட்டுகளைப் பெற்றதுடன், படமும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘தி டர்ட்டி பிக்சர் 2’ உருவாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் வித்யா பாலன் நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் இப்படத்தில் நடிக்க டிரிப்தி டிம்ரி தேர்வு செய்யப்பட்டதாகவும், பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து தமன்னா தேர்வாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தனது நடிப்பாலும் கவர்ச்சியான தோற்றத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் தமன்னா, முதல் பாகத்தில் வித்யா பாலன் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், இப்படத்தின் நடிகர்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading