தெலுங்கு நடிகரான சிவாஜி, சமீபத்தில் அவர் நடித்த ‘தண்டோரா’ தெலுங்கு திரைப்படத்தின் விழாவில் பேசும்போது, தெலுங்கு சினிமாவில் கதாநாயகிகள் அணியும் ஆடைகள் குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பேசிய சில அநாகரீக தெலுங்கு வார்த்தைகள் குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.
இந்நிலையில், தன்னுடைய தவறான வார்த்தைகள் பயன்படுத்திய பேச்சுக்காக நடிகர் சிவாஜி வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், யாரையும் அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. பெண்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருந்தால் அதற்காக நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
