ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘மைசா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வைரல்!

ராஷ்மிகா மந்தனாவின் பான்-இந்திய படங்களில் மைசாவும் ஒன்று. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தம்மா நல்ல வசூலை ஈட்டியது. அதனைத் தொடர்ந்து வெளியான தி கேர்ள் பிரண்ட் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மைசா படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது. புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடித்த தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading