நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி, பின்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து, அவரது அரசியல் பயணம் மற்றும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றன.
இந்நிலையில், நடிகர் தனுஷும் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியிருப்பதுடன், தொகுதி வாரியாக நிர்வாகிகளை வலுப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கைகள் இருக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும், தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்தோ, புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ அவரது தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயனும் ரசிகர் மன்றச் சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
