‘ஹைக்கூ’ மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கும் பெமினா ஜார்ஜ்!

சவுதி அரேபியாவில் பிறந்து வளர்ந்த மலையாள நடிகை பெமினா ஜார்ஜ், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த இவர், ‘மின்னல் முரளி’, ‘தீப்பொறி பென்னி’, ‘சேஷம் மைக்-இல் பாத்திமா’, ‘கரகம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை எனக் கூறிய பெமினா, இதற்காக முன்பு பல முயற்சிகள் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் நல்ல கதை அமைந்தாலும் தயாரிப்பு நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்படாத சூழலும், நல்ல நிறுவனமாக இருந்தால் கதை திருப்தியளிக்காத நிலையும் இருந்ததாகக் கூறிய அவர், இறுதியாக கதை மற்றும் தயாரிப்பு என இரண்டும் சரியாக அமைந்த படமாக ‘ஹைக்கூ’ கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவரை மையமாகக் கொண்டது படத்தின் ஒரு வரிக் கதை என்றதும் முதலில் தயங்கியதாகக் கூறிய பெமினா, அதற்கான நம்பகமான காரணங்களும் கதையில் இருப்பதாக விளக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீதேவி அப்பல்லாவும் கதாநாயகியாக நடிப்பது தனக்குப் பிரச்சினையில்லை என்றும், நல்ல கதையாக இருந்தால் யாருடனும் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சிலர் தன்னை நஸ்ரியாவுடன் ஒப்பிடுவதாகக் கூறிய அவர், தோற்றத்தில் அவரைப் போல இருப்பதைவிட, சாதனைகளிலும் அவரைப் போல உயர வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading