Advertisement

சமூக வலைதளங்களில் இருந்து விலகியதால் மன அமைதி கிடைத்துள்ளது – ஐஸ்வர்யா லட்சுமி!

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது தனது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் பிறருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலையிலிருந்து விலகியிருப்பது நிம்மதியைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் இருந்து விலகிய ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்திய பேட்டியில் தனது முடிவு குறித்துப் பேசியுள்ளார். முன்பைவிட தற்போது அதிக மன அமைதியுடன் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பிறரது கருத்துகளைப் பார்ப்பதால் மனதளவில் பாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், புதிய படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், திரைத்துறையில் வாய்ப்புகளைப் பெறவும் சமூக வலைதளங்கள் உதவுவதை அவர் மறுக்கவில்லை. இருப்பினும், தனிப்பட்ட முறையில் அவற்றிலிருந்து விலகியிருப்பதே தனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, அர்ஜுன் தாஸ் உடன் நடித்துள்ள ‘லவ்’ நெட்ஃபிளிக்ஸ் தொடரிலும், மலையாளத் திரைப்படமான ‘ஆஷா’விலும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply