Advertisement

கதாநாயகனாக அறிமுகமாகிறாரா ஜேசன் சஞ்சய்? – வெளியான புதிய தகவல்!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. வணிக ரீதியிலான கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜேசன் சஞ்சய், நடிகராகவும் திரையில் தோன்ற வேண்டும் என ரசிகர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது சித்தப்பாவும், ‘தாக்க தாக்க’ படத்தின் இயக்குநருமான சஞ்சீவ் இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இதுவரை படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஜேசன் சஞ்சய் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாகப் பரவும் தகவல் அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply