Advertisement

“வாய்ப்புகள் குறைக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டேன்” – பார்வதி திருவோத்து OPEN TALK!

சினிமாவைத் தாண்டி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகை பார்வதி திருவோத்து தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது வெளிப்படையான பேச்சுகள் குறித்தும் அவ்வப்போது கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம் குறித்து பேசிய பார்வதி, தனது கருத்துகளை வெளிப்படையாக கூறத் தொடங்கிய பிறகு திரைத்துறையில் தனக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “என் கருத்துக்களை வெளிப்படையாகக் கூறிய பிறகு, திரைத்துறையில் எனக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு, நான் கிட்டத்தட்ட முழுமையாக ஒதுக்கப்பட்டேன். ஆனால் என்னை திரையுலகில் இருந்து ஒதுக்க நினைத்த போதெல்லாம், மலையாள ரசிகர்கள் என் நடிப்புத் திறமையை மட்டுமே பார்த்து என்னை ஏற்றுக்கொண்டனர். ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பு ஒரு புனிதமான பிணைப்பு போன்றது. அதுவே என்னை இன்றும் திரையுலகில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply