Advertisement

‘பிக்காசோ’ படத்தின் மூலம் பாடகரான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். தொடர்ந்து, அனஸ்வரா ராஜன் நாயகியாக நடித்த ‘வித் லவ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். தற்போது கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பிக்காசோ’ படத்தில் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

லியான் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘ஹக்குனாமாடாட்டா’ வரும் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு இன்று (நவம்பர் 25) அறிவித்துள்ளது.

இந்தப் பாடலைப் படத்தின் நாயகன் அபிஷன் ஜீவிந்த் பாடியிருப்பதும் தெரியவந்துள்ளது. இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற அவர், தற்போது பாடகராகவும் அறிமுகமாவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் யோகலட்சுமி, கானா வினோத், ஷிவாணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply