சினிமாவில் பிஸியாக இயங்கி வரும் நடிகர் ஆர்யா மற்றும் நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது சின்னத்திரை பக்கம் கவனம் திருப்பியுள்ளனர். இருவரும் இணைந்து புதிய போட்டி நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
‘மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான போட்டியை மையமாக வைத்து கலகலப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார். “பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் இடையிலான போட்டி எப்போதுமே சுவாரசியமானது. அதில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி” என அவர் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரெஜினா கசாண்ட்ரா, நிகழ்ச்சியின் தலைப்பே சுவாரசியமாக இருப்பதாகவும், இந்த தலைப்பை ஆர்யாதான் வைத்திருப்பாரோ என்ற சந்தேகம் தனக்கு இருப்பதாகவும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆர்யா ‘சார்பட்டா பரம்பரை 2’, ‘வேட்டுவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரெஜினா கசாண்ட்ராவும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.
